×

ஊட்டியில் பூண்டு விளைச்சல் அமோகம் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம்

ஊட்டி, ஏப். 8: ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் பூண்டு பயிரிட்டுள்ள விவசாயிகள் அதனை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நீலகிாி மாவட்டத்தில் கொல்லிமலை, கேத்தி பாலாடா, காட்டேரி, முத்தோரை பாலாடா, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பூண்டு அதிகளவில் பயிரிடப்பட்டது. இந்நிலையில் தற்போது பூண்டு நல்ல விளைச்சல் அடைந்ததை தொடர்ந்து சில பகுதிகளில் அறுவடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டில் கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விலை போன நிலையில், தற்போது ரூ.80 முதல் 120 வரை மட்டுமே பூண்டு விலை போகிறது. இருப்பினும் விவசாயிகள் பூண்டை அறுவடை ெசய்து இருப்பு ைவத்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயி ஹரி கூறுகையில், ‘‘கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பூண்டு பயிாிட்டிருந்தோம். தற்போது பூண்டு நல்ல விளைச்சலை தந்துள்ளது. பூண்டு அறுவடை செய்யப்பட்டு தரம் பிாிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது,’’ என்றார்.

Tags : farm ,
× RELATED அதிமுக ஆதரவாளருக்கு சொந்தமான...