×

இளம் பெண் தற்கொலை

திருப்பூர், ஏப்.8: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (28). இவர் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றிய போது அங்கு பணியாற்றிய திண்டுக்கல்லை சேர்ந்த புவனேஸ்வரி (28) என்பவரை காதலித்து கடந்த 6 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்தார். தம்பதியர் மங்கலத்தை அடுத்த இடுவாயில் வசித்து வந்தனர்.  இவர்களுக்கு 5 மற்றும் 2 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 20 நாட்களுக்கு முன் தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் மஞ்சுநாதன் மனைவியை பிரிந்து கர்நாடக மாநிலம் சென்று விட்டார். இதையடுத்து புவனேஸ்வரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு மஞ்சுநாதனிடம் பேசினார். அப்போது ‘‘திருப்பூருக்கு வரமாட்டேன்’’ என்று மஞ்சுநாதன் கூறியதாக தெரிகிறது. இதனால்மனம் உடைந்த புவனேஸ்வரி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார். இது குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவன்...