×

திருத்துறைப்பூண்டியில் கஜாபுயலால் சேதமடைந்த சீனிவாசராவ் நினைவு மண்டபம் சீரமைக்கப்படுமா? மக்கள் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி ஏப்.8: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து  நிலையம் அருகில் உள்ள சீனிவாசராவ் நினைவு மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கர்நாடகமாநிலத்தில் 1907 ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி பிறந்த சீனிவாசராவ் சுதந்திர போராட்ட வீரர் ஆவார். இவர் மறைந்தபிரதமர் நேரு, மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர், ஓமந்துரார் போன்ற பல தலைவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்.இவர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் விவசாயக் தொழிலாளர்களுக்காக பாடுபட்டு 1961ம் வருடம் செப்டம்பர் மாதம் 29ம் தேதி தஞ்சாவூரில் காலமானார்.அவரது உடல் திருத்துறைப்பூண்டிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு முள்ளியாற்றாங்கரையில் செப்டம்பர் 30ம்தேதியன்று எரியூட்டப்பட்டது.2007ம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகஅரசின் சார்பில் இவரின் நினைவாக திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் ரூ.25 லட்சம் செலவில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் ஏப்ரல் 10ம் தேதிபிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 30ம்தேதி நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு மண்டபம் தற்போது எந்தவித பராமரிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது.

இந்தநிலையில் கஜா புயலில் நினைவுமண்டபத்தின் பகுதிகள் சேதமடைந்தும், வளாகத்திற்குள் செடி கொடிகள் மண்டி பராமரிப்பில்லாமல் உள்ளது. வரும் 10ம் தேதிக்கு முன்பாக சீரமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்மாநிலவிவசாய தொழிலாளர் சங்கமாநில செயலாளர் பாஸ்கர் கூறுகையில் சீனிவாசராவ்பங்கேற்ற போராட்டங்கள், வெளிநாடு சென்ற அரியவகை புகைப்படங்கள் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டு வைப்பதற்காக செய்திமக்கள் தொடர்புதுறை இயக்குனருக்கு கடிதம் எழுதிஇதுவரைஅனுமதிவழங்காதது கண்டிக்கதக்கது.மேலும் நூலகத்திற்கு தேவையான பொருட்கள் நன்கொடையாக வழங்க தயாராகஉள்ளோம். வரும் 10ம்தேதிசீனிவாசராவ்பிறந்தநாள் என்பதால் கஜா புயலில் சேதமடைந்தமணிமண்டபத்தை சீரமைத்தும், காவலர் நியமித்தும், அவர் எழுதியநூல்களை வைக்க வேண்டும்.தினந்தோறும் மணிமண்டபத்தை திறந்தால் பொதுமக்கள்அதிகம் வந்து புத்தகங்களை படித்து செல்வார்கள் என்றார்.

Tags : Srinivasa Rao Memorial Hall ,Kajapauli ,
× RELATED இவ்வாறு எஸ்.பி துரை தெரிவித்துள்ளார்....