பேராவூரணி அருகே 2 கூரை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்

பேராவூரணி, ஏப். 8: பேராவூரணி அருகே நேற்று மாலை 2 கூரை வீடுகள் எரிந்து சம்பலானது. பேராவூரணி அருகே உள்ளது களத்தூர் கிராமம் கவரத்தெருவை சேர்ந்த விவசாய ெதாழிலாளி ரவிச்சந்திரன். இந்நிலையில் நேற்று இவருக்கு சொந்தமான கூரை வீடு  திடீரென தீப்படித்து எரிந்தது. இதில் கூரை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதே தெருவில் வசிப்பவர் முத்துராமலிங்கம். இவரது வீடும் திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேராவூரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல அணைத்தனர். தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

இதே கவர சேர்ந்தவர் பார்வதி (60). இவரது வீடு கடந்த 4ம் தேதி திடீரென தீப்பற்றி எரிந்து சாம்பலானது. ஒரே தெருவில் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள 3 கூரை வீடுகள் தீடீரென தீயில் எரிந்து நாசமானதில் சதிவேலை எதுவும் உள்ளதா அல்லது மின் கசிவு காரணமா என்பது தெரியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் களத்தூர் கிராம நிர்வாக அலுவலர்கள் நரேந்திரன், கவுசல்யாதேவி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சேத மதிப்புகளை ஆய்வு செய்தனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : roof houses ,Beravoorani ,
× RELATED தனியார் மர குடோனில் தீ விபத்து