×

அரியலூர் அருகே சிதம்பரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரசாரம் கொடிஇல்லாததால் தேமுதிகவினர் அதிருப்தி

அரியலூர்,ஏப்.8: அரியலூர் மாவட்டம். கீழப்பழுவூரில் சிதம்பரம் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து ஓட்டு சேகரிக்க தமாகா மாநில தலைவர் ஜி.கே. வாசன் வருகை தந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜிகேவாசன் பேசுகையில் அதிமுக பலமான கூட்டணி கட்சிகளுடன் உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக,தாமா.க கட்சி தேமுதிக போன்ற கட்சிகளுடன் உள்ளது. இந்தியாவை காக்கவேண்டும் என்றால் மோடி பிரதமராக வரவேண்டும் என்று பேசினார். அதுபோல்  சிதம்பரம் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் சந்திரசேகருக்கு வாக்கு அளித்தால் இவர் உங்களுக்காக பாராளுமன்றத்தில் போராடி உங்களுடைய கோரிக்கைளை நிறைவேற்றுவார் என்று கூறினார். நிகழ்ச்சியில் அதிமுக கூட்டணி கட்சிகளின் கொடிகள்  அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கொடிகள் மட்டுமே கட்டியிருந்தனர். இதனால் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்ப்பட்டது. இதனையடுத்து தேமுதிக தொண்டர்கள் அதிக அளிவில் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.
அதுபோல் தேர்தல் விதிமுறை படி அரசியல் தலைவர்கள் சிலைகள் எதும் திறந்திருக்க கூடாது என்பது சட்டம், ஆனால் கீழப்பழூவூர் புதிய  பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை திறந்திருந்தது. அங்குதான் ஜிகே வாசன் பேசினார் என்பது குறிப்பிட தக்கது.

Tags : Chidambaram ,candidate ,AIADMK ,GK Vasan ,Ariyalur ,dissident ,DMDK ,
× RELATED பரம்பரை சொத்துவரிக்கு எதிரான...