×

கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம்

காஞ்சிபுரம், ஏப்.8: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவினை உறுதி செய்யும் வகையில் மாவட்ட  கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பொன்னையா பார்வையிட்டார். 17வது மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் வாக்காளர்களுக்கு பல்வேறு வகையில் மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பை போல் வாக்குச்சாவடி அலுவலர், துணை அலுவலர் வாக்குப்பதிவு எந்திரம் கட்டுபாட்டு இயந்திரம் மற்றும் வாக்களித்த உறுதி செய்யும் விவிபிஏடி இயந்திரம்  உள்ளிட்ட அனைத்தும் வாக்குசாவடி அலுவலர்களைக் கொண்டு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் வண்ணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தினை மாவட்ட கலெக்டர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற மாதிரி வாக்கு சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வாக்காளர்களுக்கு அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், மகளிர் திட்ட அலுவலர் எழில் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : polling center ,office ,Collector ,
× RELATED சென்னையில் தபால் வாக்குப்பதிவு...