×

100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி

காஞ்சிபுரம், ஏப்.8: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்  நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் கலெக்டர் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் 17 வது மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் வாக்காளர்களுக்கு பல்வேறு வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரையிலான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கான மினி மாரத்தான் போட்டி மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது காலை 6 மணிக்கு துவங்கிய இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில்  கலெக்டர்  பொன்னையா , ரோட்டடரி கிளப் ஆஃப் காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி சங்க தலைவர் தாண்டவராயன்,  காஞ்சி ரேடியன்ஸ் சங்க தலைவர் நிஷா பிரியா, மற்றும் முன்னாள் உதவி ஆளுநர்  பரணிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags :
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...