வேதாரண்யம் அருகே பைக்கில் சென்றவர் தவறி விழுந்தவர் சாவு

வேதாரண்யம், ஏப்.8: வேதாரண்யம் தாலுக்கா இடும்பவனம் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகரெத்தினம் (30).  விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இன்னும் திருமணம் ஆகவில்லை.  இவர் கடந்த 28ம் தேதி பைக்கில் வாய்மேடு பகுதிக்கு வந்துகொண்டிருந்தார்.  அப்போது துணை மின்நிலையம் அருகே வரும்போது குறுக்கே நாய் வந்ததால் பைக்கில் வந்த முருகரெத்தினம் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.  அவரை திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில் வாய்மேடு இன்ஸ்பெக்டர் சுகுணா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.Tags : deceased ,Vedaranyam ,
× RELATED இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக்