×

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி காரைக்காலில் மினி மாரத்தான் ஓட்டம்

காரைக்கால், ஏப்.8: நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, திருநள்ளாறு தென்னங்குடியில், நேற்று மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில், காரைக்கால் மாவட்டம் முழுவதும் 100 சதவிகித வாக்குப்பதிவை ஏற்படுத்த, மாவட்ட தேர்தல் துறை அதிகாரி விக்ராந்த்ராஜா தலைமையில் தீவிர விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியைச்சேர்ந்த தென்னங்குடியிலிருந்து, திருநள்ளாறு  தர்பாராண்யேஸ்வரர் கோயில் வரிசை வளாகம் வரை மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இந்த மாரத்தான் ஓட்டத்தை, மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஓட்டத்தில், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி குறித்து, மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் கூறுகையில், இந்த மினி மாரத்தான் ஓட்டம் மூலம் மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரும் வரும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதே. அதனால், வரும் 18ம் தேதி காரைக்காலில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தவறாது வாக்களிக்கவேண்டுகிறோம் என்றார். நிகழ்ச்சியில்,  மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அல்லி, உடற்கல்வி இயக்குனர் மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags : Karaikal ,voting ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...