×

சோதனை ஓட்டத்துக்கு சென்ற கார் தீப்பிடித்து நாசம்

ஆவடி, ஏப். 8: சோதனை ஓட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடி, காமராஜர் நகர், பட்டேல் தெருவில் ஆபிரகாம் என்பவருக்கு கார் சர்வீஸ் சென்டர் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த காமாட்சி ராஜா என்பவர், தனது காரை பராமரிப்பு பணிக்கு அங்கு விட்டிருந்தார். பின்னர் அந்த காரை அம்பத்தூரில் உள்ள மற்றொரு தனியார் சர்வீஸ் சென்டரில் பழுது நீக்க ஆபிரகாம் விட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில்  சோதனை ஓட்டமாக ஆபிரகாம், காரை ஓட்டிவந்தார். ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலை, அய்யன்குளம் பகுதியில் வந்தபோது, காரின் இன்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை  வெளியேறியது. உடனடியாக காரை நிறுத்திவிட்டு இறங்கிவந்து பார்த்தார். அதற்குள் இன்ஜின் பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்து அப்பகுதியில் புகைமண்டலமாக மாறியது. தகவலறிந்த ஆவடி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, கார் இன்ஜினில் தீப்பிடித்த பகுதிகளை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதமாகிவிட்டது. இதுபற்றி ஆவடி இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்
கின்றனர்.

Tags : test drive ,
× RELATED திருப்பதியில் சோதனை முயற்சியாக...