×

ஒரே பதிவு எண்ணில் பல கார்களை இயக்கிய டிராவல்ஸ் அதிபர் கைது: பல லட்சம் வரி ஏய்ப்பு செய்தது அம்பலம்

சென்னை: ஒரே பர்மிட் எண்ணை பயன்படுத்தி பல சொகுசு கார்களை இயக்கி அரசுக்கு பல லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு ெசய்த டிராவல்ஸ் நிறுவன அதிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆர்.ஏ.புரம் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் மோகன் பாபு (26). இவர் டிமாண்டி காலனியில் மோகன் என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும் விலை உயர்ந்த கார்கள் ஒரே பர்மிட் நம்பரில் இயக்கி வருவதாக மந்தைவெளி ஆர்டிஓ அலுவலகத்திற்கு தொடர் புகார்கள் வந்தன. அதன்பேரில், உதவி வாகன ஆய்வாளர் சுந்தர்ராஜன் மற்றும் அபிராமபுரம் இன்ஸ்பெக்டர் ஆகியோர் அதிரடியாக மோகன் டிராவல்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.

அதில், PY 05-Y 9577 என்ற பதிவு எண்ணில் 3 பேருந்துகளும், PY 05 -D 0055 பதிவு எண்ணில் விலை உயர்ந்த 3 சொகுசு கார்களும் இயக்கியது தெரியவந்தது. இதன் மூலம் அரசுக்கு பல லட்ச ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேருந்துகள் மற்றும் 3 சொகுசு கார்களை உதவி வாகன ஆய்வாளர், போலீசார் உதவியுடன் பறிமுதல் செய்தார். மேலும், மோசடியாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்திய தொழிலதிபர் மோகன்பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Travels Principal ,tax evasion ,
× RELATED ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 42 போலி நிறுவனங்கள்: 3 பேர் கைது