×

வாடிக்கையாளர்களின் ரூ.2.5 லட்சம் பொருள் அபேஸ்: கூரியர் நிறுவன ஊழியர்கள் கைது

சென்னை: காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள பிரபல தனியார் கூரியர் நிறுவனம் மூலம்  கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு வந்த பொருட்கள் டெலிவரி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேட்டபோது, ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்ைல, என கூறப்படுகிறது.  இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் நிர்வாகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட நிர்வாகம், பொருட்கள் திருடப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். எனவே தனியார் கூரியர் நிறுவனம் சார்பில் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். அதில், கூரியர் நிறுவன ஊழியர்களான காஞ்சிபுரம் ஐயம்பேட்டையை சேர்ந்த லோகேஷ் (20), ஏனாத்தூர் சத்யா (25), ஜெகதீஷ் (22) ஆகிய 3 பேரும் டெலிவரிக்காக வந்த பொருட்களை திருடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 செல்போன்கள், 4 எல்இடி டிவி உள்ளிட்ட சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

Tags : Customers ,company employees ,Courier ,
× RELATED விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி...