×

யூ-டியூப் சேனல்களில் மாணவர்களை பாதிக்கும் ஆபாச சைகை டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து சூர்யா தேவி மீது புகார்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதியவர் மனு

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதுப்பேட்டை மீர் அசக் உசேன் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (63) என்பவர் நேற்று அளித்த புகார் மனு: ‘‘சமூக வலைதளங்களில் சிக்கந்தர், சூர்யா, ஜி.பி.முத்து போன்றவர்கள் பெண்களை இழிவாக கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி பேசியும், உளவியல் ரீதியாக மாணவர்களையும், இளைஞர்களை மன வருத்தத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள் செல்போன், சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் நிலையில் டிக்டாக் செயலிலிருந்து யூ-டியூப்பில் வந்து சமூக சீரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இவர்கள் மீது, நடவடிக்கைகள் மேற்கொண்டு மாணவர்களின் மனதை பாதிக்கின்ற வகையில் உள்ள இரட்டை அர்த்தங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி, யூ-டியூப் சேனலை முடக்கி அவர்களை கைது செய்ய வேண்டும்….

The post யூ-டியூப் சேனல்களில் மாணவர்களை பாதிக்கும் ஆபாச சைகை டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து சூர்யா தேவி மீது புகார்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதியவர் மனு appeared first on Dinakaran.

Tags : U-Tube ,TikTok ,Chennai ,Pudupettu Mir Asak Useen Street ,Police Commissioner's Office ,Chennai Vapery ,Bannerselvam ,U-Tube Channels ,Devi ,Surya ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...