×

உப்பிலியபுரம் பகுதியில் குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி

துறையூர், ஏப். 8: உப்பிலியபுரம் பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என பெரம்பலூர் மக்களவை தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி அளித்தார்.பெரம்பலூர் மக்களவை தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் கூட்டணி கட்சியினருடன் உப்பிலியபுரம் ஒன்றிய பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார். உப்பிலியபுரம் ஒன்றிய பகுதியை சேர்ந்த மங்கப்பட்டி  கிராமத்தில் பாரிவேந்தரை ஆதரித்து திமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான கே.என்.நேரு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து வடக்கு மாவட்ட செயலாளர் காடு வெட்டி தியாகராஜன், எம்எல்ஏ ஸ்டாலின் குமார் ஆகியோர் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தனர். வேட்பாளர் பாரிவேந்தர் பேசுகையில், திமுக தேர்தல் வாக்குறுதியாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளவாறு விவசாய கடன் மற்றும் மாணவாகளின் வங்கி கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.

தண்ணீர் பிரச்னை தொடர்ந்து இப்பகுதியில் இருப்பதால் குடிநீர் பிரச்னை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு தானிய கிடங்கு அமைக்கப்படும். பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 300 மாணவர்களுக்கு எனது கல்லூரியில் இலவசமாக படிக்கவும், வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும் என கூறினார்.இதை தொடர்ந்து  தளுகை, பாதர்பேட்டை, முருங்கபட்டி, நாகநல்லூர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு உங்கள் பொன்னான வாக்கை உதயசூரியன் சின்னத்தில் அளிப்பீர் என கேட்டு கொண்டார். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம்லீக், மதிமுக, விசி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொண்டனர்.குளித்தலை: பெரம்பலூர் மக்களவை தொகுதி திமுக கூட்டணி கட்சி, ஐஜேகே கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் பெரம்பலூர் எம்பி தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதி கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்தில் 13 ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று கிராமம் கிராமமாக சென்று உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, எம்எல்ஏ ராமர், முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், ஐஜேகே கட்சி மாவட்ட செயலாளர் பிச்சை, மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஜெயவேல், ரெங்கரெத்தினம், வேலாயுதம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரசாரத்தின்போது வேட்பாளர் பாரிவேந்தர் பேசியதாவது:
    நான் எம்பி தேர்தலில் வெற்றி பெற்றால் நன்றி கூற வரும் நேரத்தில் இந்த குளித்தலை தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பகுதி கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து பணிபுரிவேன். மக்களவை தேர்தல் என்பது நாட்டின் தலைவிதியை மாற்றம் செய்யும் தேர்தலாக இருப்பதால் ஒவ்வொரு வாக்காளர்களும் வரும் 18ம் தேதி சிந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். மேலும், மாயனூர் கதவணையிலிருந்து மழைக்காலங்களில் உபரி நீராக கடலுக்கு சென்று வீணாகும் நீரை பஞ்சப்பட்டி ஏரிக்கு கொண்டு வந்து விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுப்பேன் என மக்கள் மத்தியில் உறுதி அளித்தார்.

Tags : Barivendra ,IGK ,area ,Uppaliyapuram ,
× RELATED கோவையில் யானை மந்தைகளுடன் குட்டியானையை சேர்க்க முயற்சி!!