×

எம்எல்ஏ விடுதி அருகே சாலையோரம் நிறுத்திய பேருந்தை சிறுவர்கள் இயக்கியதால் பரபரப்பு

* மின் பெட்டியில் மோதி நின்றது
* பெரும் விபத்து தவிர்ப்பு

சென்னை: சாலையோரம் நிறுத்தப்பட்ட பேருந்தை சிறுவர்கள் இயக்கிய போது, அருகில் உள்ள மின்சார பெட்டியில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம், எம்எல்ஏ விடுதி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதி அருகே தங்கி பணியாற்றி வருகின்றனர். தினமும் ஊழியர்களை பணி நடைபெறும் இடத்துக்கு அழைத்து செல்ல பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அப்படி இயக்கப்படும் பேருந்துகள் மீண்டும் எம்எல்ஏ விடுதி அருகே உள்ள சாலையோரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று மதியம் பேருந்து ஒன்று எம்எல்ஏ விடுதி சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, அப்பகுதியை ேசர்ந்த சிறுவர்கள் 2 பேர் பேருந்தில் ஏறி விளையாடி கொண்டிருந்தனர். திடீரென இரண்டு சிறுவர்களில் ஒருவன் பேருந்தில் டிரைவர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்கி உள்ளனர். இதனால், திடீரென சீறி பாய்ந்த பஸ் தறிகெட்டு ஓடியது. சிறுவனால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாதால், பரிதவித்தான். சிறிது தூரம் ஓடிய பஸ், சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மின் இணைப்பு பெட்டியில் பயங்கர வேகத்தில் மோதி நின்றது.

உடனே 2 சிறுவர்களும் பேருந்தில் இருந்து இறங்கி அங்கிருந்து ஓடினர். சத்தம் கேட்டு அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள், 2 சிறுவர்களையும் ஆட்டோவில் துரத்தி சென்று பிடித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விபத்து நடைபெறும் போது சாலையில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தால் மின்இணைப்பு பெட்டி சேதடைந்து சிறிது நேரம் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த  அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்தை எடுத்தனர். பிறகும் மின் ஊழியர்கள் உதவியுடன் மின்இணைப்பு பெட்டியையும் சரிசெய்தனர். பின்னர் சம்பவம் குறித்து போக்குவர்தது புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு ெசய்து, எந்த வித பாதுகாப்பு இன்றி பேருந்தை விட்டு சென்ற டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் எம்எல்ஏ விடுதி அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Tags : boys ,bus stop ,hostel ,MLA ,
× RELATED மஞ்சும்மல் பாய்ஸ் ரூ.200 கோடி வசூல்