×

குளச்சலில் பாஜ தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்

குளச்சல், ஏப். 8: கன்னியாகுமரி மக்களவை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில் நடந்தது. நகர தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். நகர அ.தி.மு.க.செயலாளர் ஆண்ட்ரோஸ், தே.மு.தி.க. செயலாளர் ரீமான்ஸ், த.மா.காவை சேர்ந்த லீனஸ், ச.ம.கவை சேர்ந்த பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பா.ஜ. பொதுச்செயலாளர் ஜெனோ வரவேற்றார். மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற பொருளாளர் எஸ்.எம்.பிள்ளை, தே.மு.தி.க.பொருளாளர் வக்கீல் ஜெயச்சந்திரன், பா.ஜ.கோட்ட பொறுப்பாளர் தர்மராஜ், மாவட்ட பிரசார அணி துணைத்தலைவர் ஜெயபிரகாஷ், குளச்சல் தொகுதி பொறுப்பாளர் கோபகுமார், மாவட்ட ச.ம.க.செயலாளர் கால்டுவின் ஆகியோர் பேசினார். அ.தி.மு.க. மாவட்ட முன்னாள் செயலாளர் சிவசெல்வராஜன், அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மீனவர் அணி துணைச்செயலாளர் கில்லேரியன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : BJP ,election campaign rally ,Kilinochchi ,
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு