சின்னையன்பேட் லட்சுமி நகரில் கொசு பிரச்னை தீர்க்கப்படும்

புதுச்சேரி, ஏப். 8:    புதுவை தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வெங்கடேசன் தொகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் சின்னையன்பேட், ராஜேந்திரா நகர், தங்கவேல் கார்டன், லட்சுமி நகர் கிழக்கு, விநாயகமுருகன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து நேற்று காலையும் சின்னையன்பேட்டில் விடுபட்ட பகுதிகளான லட்சுமி நகர், லட்சுமி நகர் விரிவாக்கம், விநாயக முருகன் நகரில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். வேட்பாளர் வெங்கடேசனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், வெற்றிபெற்றதும் கழிவுநீர் வாய்க்கால், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீர்க்கவும், கொசுத்தொல்லையை போக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அவருடன் திமுக வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், சேதுசெல்வம், காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் வீரமுத்து, தொகுதி தலைவர் சிவா, பொதுச்செயலாளர் சிவசங்கர், விசிக ஜான்சன் மற்றும் கூட்டணி கட்சியினர் வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்டினர்.

Tags : town ,Lakshmi ,
× RELATED ஏனாமில் 13 ஆயிரம் மக்களை வெளியேற்ற கவர்னர் உத்தரவு