×

ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவுக்கு கட்சி தலைவர்கள் இரங்கல்

சென்னை: தமிழக எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழிசை (தெலங்கானாஆளுநர்): எதிர்கட்சித் துணைத்தலைர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.எடப்பாடி பழனிசாமி (எதிர்க்கட்சி தலைவர்): அதிமுக ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு துயரமும், வேதனையும் அடைகிறேன். இந்த பேரிழப்பை எப்படி தாங்குவார் என்று எண்ணி கண்ணீர் வடிக்கிறேன். வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்):  தன் துணைவியாரையும் இழந்து தவிக்கின்ற ஓ.பன்னீர்செல்வம், உற்றார், உறவினர்களுக்கும் மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இதேபோல் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முத்தரசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜ தலைவர் அண்ணாமல, சமக தலைவர் சரத்குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தேமுதிக தலைவர் விஜயகாந்த், திருநாவுக்கரசர், ஏ.எம்.விக்கிரமராஜா, ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்….

The post ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவுக்கு கட்சி தலைவர்கள் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : O.O. ,pannerselvam ,Chennai ,Tamil Nadu ,Deputy Leader ,O.M. ,Bannerselvam ,Governor of ,Telangana ,O. Party ,
× RELATED சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு...