×

உடுமலை தளி ரோட்டில் கிருஷ்ணா ஜூவல்லரி இன்று திறப்பு விழா

உடுமலை,ஏப்.7: உடுமலையில் 1985ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் கிருஷ்ணா ஜூவல்லரி, தற்போது தளி சாலையில் எண்.275ல் புதிய பொலிவுடன், புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (7ம்தேதி) காலை 10 மணி முதல் 11 மணிக்குள் நடக்கிறது. உடுமலை மக்கள் பேரவை தலைவர் யு.கே.பி.முத்துக்குமாரசாமி தலைமை வகிக்கிறார். மாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர் முன்னிலை வகிக்கிறார். திமுக மாநில இளைஞரணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் புதிய ஷோரூமை திறந்து வைக்கிறார். அக்ஷயா மணியன், மடத்துக்குளம் சி.கே.மருத்துவமனை டாக்டர் ஜெயபாரதி ராஜபாலன், துங்காவி லாவண்யா பாலசுப்ரமணியன், சங்கீதா இளங்கோவன், சிவகாமி கந்தகுமார் ராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றுகின்றனர்.

வித்ய நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கே.பாலசுந்தரம் வைர நகை பிரிவையும், துங்காவி இந்தியன் ஆயில் டீலர் ஏ.பாலசுப்ரமணியன் வெள்ளி நகைப் பிரிவையும் திறந்து வைக்கின்றனர். திண்டுக்கல் ஸ்ரீவாசவி தங்க மாளிகை மேடா என்.ரவி முதல் விற்பனையை துவக்கி வைக்க, ஆலாம்பாளையம் கே.சுப்ரமணியம், ஜெகதீஸ்வரி பெற்றுக்கொள்கின்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணக்குமார், உடுமலை நகராட்சி ஆணையர் ராஜாராம், டிஎஸ்பி ஜெயச்சந்திரன், சி.கே.மருத்துவமனை டாக்டர் கே.ராஜபாலன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். திறப்பு விழாவுக்கு வருபவர்களை,கே மணியன் உமாதேவி மணியன், கவுதம் கிருஷ்ணா, அக்ஷயா மற்றும் அருக்காணியம்மாள், பாக்யலட்சுமி ஆகியோர் வரவேற்கின்றனர். புதிய ஷோரூமில் லிப்ட் வசதி, கார் பார்க்கிங் வசதி, மாங்கல்ய ஹால், வைர நகை பிரிவு, தங்கம், வெள்ளி நகைப்பிரிவு என தனித்தனியாக உள்ளன. அனைத்து வகையான டிசைன்களுடன் கூடிய கொல்கத்தா, பெங்காளி, மும்பை, ராஜ்கோட், ஸ்வரோவ்ஸ்கிரி, காஸ்டிங் தங்க நகைகளும், வெள்ளி நகைகள், வெள்ளி பாத்திரங்கள், ஆன்டிக் வெள்ளி ரகங்களில் நகைகளும், பொருட்களும், கிப்ட் பொருட்களும் உள்ளதாக உரிமையாளர்கள் கே மணியன், கவுதமன்கிருஷ்ணா தெரிவித்தனர்.

Tags : Krishna Jewelery ,ceremony ,Udumalai Thali Road ,
× RELATED பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா