×

ஒரு நபருக்கு 5 குவாட்டருக்கு மேல் வழங்க கூடாது டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

ஈரோடு, ஏப். 7: தேர்தல் முடியும் வரை ஒரு நபர்க்கு அதிகபட்சம் 5 குவாட்டர்களுக்கு மேல் வழங்க கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மது விற்பனையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: வாக்கு பதிவு முடியும் வரை அதிகபட்சமாக ஒரு நபருக்கு 5 குவாட்டருக்கு மேல் வழங்கக்கூடாது. மொத்தமாக பெட்டிகளில் விற்கக்கூடாது. பார்களில் குடிப்பவர்கள் தவிர வெளியே எடுத்து செல்லும் பாட்டில்களுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும்.

ரசீது இன்றி பாட்டில்கள் கொண்டு சென்றால் மதுவிலக்கு போலீசார், தேர்தல் பணியில் உள்ள எந்த அதிகாரியும் அவற்றை பறிமுதல் செய்யலாம். பிடிபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் கட்சிகளின் அலுவலகம், வேட்பாளருடன் செல்லும் வாகனங்கள், பிரசார அனுமதி பெற்ற வாகனங்கள் போன்றவைகளில் மது பாட்டில்கள் எடுத்து சென்றால் அவ்வாகனம் மீதும், அனுமதி பெற்ற கட்சி மீதும், வேட்பாளர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனுமதிக்கப்பட்ட பார்களில் உள்ளே வைத்து குடிப்பதற்கு மட்டும் அனுமதிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக விற்பனை நடந்தால், அனுமதிக்கப்பட்ட ஓட்டல் பார் மற்றும் டாஸ்மாக் கடையில் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags : Election Commission ,administration ,Taskmak ,
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...