×

மகளிருக்கான சிறப்பு ஆடை அலங்கார பொருள் கண்காட்சி

ஈரோடு, ஏப்.7: ஈரோடு பெருந்துறை ரோடு செங்கோடம்பாளையம் பகுதியில் ஆலயமணி அரங்கு உள்ளது. இங்கு சிவகிரி வேல் தியேட்டர்ஸ் மற்றும் டெக்கோ ஹட் நிறுவனம் சார்பில் மகளிருக்கான சிறப்பு ஆடை அலங்கார பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது. இதன் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. வேல் தியேட்டர்ஸ் மற்றும் ‘டெக்கோ ஹட்’ நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் உமாசுரேஷ் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
கண்காட்சியில் 40 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. வைர நகைகள், தங்க நகைகள், பட்டுச்சேலைகள், டிசைனர்சேலைகள் என்று பல விதமான நகை மற்றும் ஆடைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

இதுபற்றி நிர்வாக இயக்குனர் உமா சுரேஷ் கூறியதாவது: ஈரோட்டில் எங்கள் நிறுவனம் சார்பில் 6 வது கண்காட்சியாக இந்த நகைகள் மற்றும் ஆடை அலங்கார பொருட்கள் கண்காட்சியை நடத்தி வருகிறோம். இந்த கண்காட்சி மூலம் ‘ஆட்டிசம்’ பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி செலவுக்கும், மாற்றுத்திறனாளிகள், சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு  தேவையான உதவிகள் செய்யப்படும்.  பொதுமக்கள் புதிய ஷாப்பிங் அனுபவத்தை பெறும் வகையில்   கண்காட்சி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.  கண்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிவரை நடக்கிறது.





Tags : girls ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்