×

வியாபாரிகள் அனைவரும் 100% தவறாமல் வாக்களிக்க வேண்டும் வர்த்தககழக செயற்குழுவில் வலியுறுத்தல்

முத்துப்பேட்டை. ஏப்.7 : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வர்த்தகக்கழக மாதாந்திர செயற்குழு கூட்டம் தலைவர் மெட்ரோமாலிக் தலைமையில் நடைபெற்றது.  இதில், வருகின்ற தேர்தலில் வியாபாரிகள் அனைவரும் ஜனநாயக கடமைகளில் ஒன்றாக கருதி 100 சதவிதம் வாக்களிக்கவேண்டும், அதேபோல் பொதுமக்களிடமும் தவறாது  வாக்களிக்க விழிப்புணர்வு செய்யவேண்டும், இதுகுறித்து விரைவில் துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது  முத்துப்பேட்டை மின்சார வாரியத்தில் மின் கட்டணம் வசூல் செய்ய கூடுதல் கவுண்டர் திறக்க வேண்டும், முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயலில் சாய்ந்த மின் கம்பங்கள் அப்புறப்படுத்தாமல் சாலைகளில் ஆங்காங்கே போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக கிடக்கிறது. அதனை மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்தவேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Employers ,Commerce Committee ,
× RELATED மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலன்