×

திருநள்ளாறு கிராமங்களில் விவிபேட் இயந்திர செயல்விளக்கம்

காரைக்கால், ஏப்.7: நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடு குறித்து, திருநள்ளாறு கிராம மக்களிடையே கரகாட்டம், பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில், காரைக்கால் மாவட்டம் முழுவதும் 100 சதவிகித வாக்குப்பதிவை ஏற்படுத்த, மாவட்ட தேர்தல் துறை, கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான விக்ராந்த்ராஜா தலைமையில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருநள்ளாறு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த நல்லம்பல், சேத்தூர் பண்டாரவடை மற்றும் கோட்டாபடி கிராமப்புறங்களில் 100 சதவிகித வாக்குபதிவை ஏற்படுத்த, நடமாடும் மாதிரி வாக்குச் சாவடிகளோடு, கரகாட்டம், பொம்மலாட்டம் மூலம், நேற்று முன்தினம் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசு பள்ளி ஆசிரியர் முருகன் குழுவினர், தேர்தல் தொடர்பான புகார்கள், கருத்துகளை தெரிவிக்க கட்டணமில்லா 1950 என்ற தொலைபேசியின் செயல்பாடுகள், சி.விஜில் என்கிற செயலியின் செயல்பாடுகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள உள்ள விவிபாட் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து கரகாட்டம், பொம்மலாட்டம் மூலம் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

Tags : demonstration ,villages ,Tirunallar ,
× RELATED பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்