×

பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் மாவட்டத்தில் இதுவரை ரூ. 5.71 கோடி பறிமுதல்

சேலம், ஏப். 5: சேலம் மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இதுவரை ரூ. 5.71 கோடி  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் 33 பறக்கும் படை, 33 நிலை கண்காணிப்பு குழு வீடியோ சர்வைலன்ஸ் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இக்குழுவினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 11ம் தேதி முதல் நேற்று வரை நடந்த அதிரடி சோதனையில் ரூ. 5 கோடியே 60லட்சத்து 67 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை தவிர, 11 சட்டமன்ற தொகுதியிலும் 65 கிலோ வெள்ளியும், சேலம் மேற்கு தொகுதியில்  222 கிலோ துத்தநாகமும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5.71 கோடியும், வெள்ளி பொருட்களும் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags : flying squad officers ,district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...