×

நாமக்கல்லில் ஓட்டுப்பதிவன்று மின் ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது என அறிவிப்பு

நாமக்கல், ஏப்.5: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 18 ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் முழுவதும் மின் தடை ஏற்படாது என்றும், பொதுவிடுமுறை என்றாலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மின் வாரிய ஊழியர்களுக்கும் விடுமுறை கிடையாது என்றும் நாமக்கல் மின்சார வாரியத்தின் மேற்பார்வையாளர் சந்தானம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட மின்சார வாரியத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று குறிப்பாக ஒயர்மேன், போர் மேன், ஏஇ, டிஇ என அனைத்தும் நிலைகளிலும் உள்ள பணியாளர்கள் வாக்களித்து விட்டு பணிக்கு வர வேண்டும்.

மேலும், அன்றைய தினம் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடி மையத்தில் மின்தடை ஏற்பட்டாலோ அல்லது வாக்குச் சாவடி மையங்களுக்கு அருகில் உள்ள டிரான்ஸ்பார்ம்களில் ஏதேனும் பிரச்னை இருப்பின் நாமக்கல் மின்சார வாரியத்தின் மேற்பார்வையாளர் சந்தானம் 9445852400 என்ற எண்ணிலும், நாமக்கல் செயற்பொறியாளர் 9445852390 என்ற எண்ணிலும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

Tags : power workers ,vacation ,Namakkal ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...