×

தென்சென்னை தொகுதியில் என்னை வெற்றிபெற செய்தால் பொதுமக்களை தினமும் சந்தித்து குறைகளை தீர்த்து வைப்பேன்: அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா உறுதி

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா தொகுதி மக்களை வீடுவீடாக நேரில் சந்தித்து பரிசு பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது, அவர்களின் கோரிக்கை என்ன? கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்டாமல் கிடப்பில் உள்ள திட்டங்கள் என்ன என்பது குறித்தும், என்னை தேர்வு செய்தால் நான் உங்களுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன என்பது பற்றியும் கேள்வி கேட்டு வாக்கு சேகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் இசக்கி சுப்பையாவுக்கு மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், நேற்று காலை சைதாப்பேட்டை 171வது வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி சரவணன், பகுதி செயலாளர் கோட்டூர்புரம் கந்தன், வட்ட செயலாளர்கள் யுவராஜ், அறிவழகன் உட்பட ஏராளமானோர் அவருடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

பிரசாரத்தின் போது இசக்கி சுப்பையா பேசியதாவது:

 சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் வறண்டு விட்டது. சைதாப்பேட்டை மக்களோ அன்றாட குடிநீர் தேவைக்கு கஷ்டப்பட்டு வருவதாக தெரிவித்தனர். சென்னை குடிநீர் வாரிய லாரிக்கு பதிவு செய்தால் வருவதற்கு 15 முதல் 20 நாட்கள் ஆவதாக தெரிவிக்கின்றனர். என்னை வெற்றிபெற செய்தால் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பேன். மேலும், இந்த பகுதிகளில் கொசு பிரச்னை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை எல்லாம் உடனடியாக செய்து தருவேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags : constituency ,South ,Senate ,candidate ,EMI ,
× RELATED மண்டல அலுவலகம் தெற்கு தொகுதி தேர்தல்