×

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா பந்தல்கால் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது

குளித்தலை, ஏப். 5: அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா பந்தல்கால் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர்மலையில் தமிழகத்தில் உள்ள சிவதலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற 1017 படிகள் கொண்ட ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் 12 நாள் சித்திரை தேர் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான திருவிழா நேற்று பந்தல்கால் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முதல்நாள் திழுவிழா வரும் 10ம் தேதி தொடங்குகிறது.

அதனை தொடர்ந்து 12 நாட்கள் மண்டகப்படிதாரர்கள் தினந்தோறும் சுவாமி அலங்காரம் செய்து வழிபட்டு வருவார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5ம் நாள் ஏப்ரல் 14ம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. 8ம் நாள் 17ம் தேதி இரவு குதிரை வாகனத் தேர் நடைபெறுகிறது. 9ம் நாள் 18ம் தேதி அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. விழாவில் வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : festival ,Chiranjeevi ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...