×

பிறவிமருந்தீசர் கோயிலில் சுவாமி வீதியுலா

திருத்துறைப்பூண்டி, ஏப்.5:திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் உபயதாரர்கள் சார்பில் காலை நேரத்தில் வாகனம் இல்லாமல் படிசட்டம் மூலம் சுவாமி வீதியுலாவும், இரவு நேரங்களில் சிறப்பு வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்று வருகிறது.  நேற்று முன்தினம்  காலை விநாயகர் படி சட்டத்திலும், இரவு விநாயகர் மூஞ்சூர் வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் கோயில் செயல் அலுவலர் முருகையன், மேலாளர் சீனிவாசன்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags : Vishnu ,
× RELATED 3 பட டெக்னீஷியன்களுக்கு முழு சம்பளம் கொடுத்தார் நடிகர் விஷ்ணு