×

திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்

திருத்துறைப்பூண்டி, ஏப்.5:  திருத்துறைப்பூண்டி தென்பாதி, வடபாதி பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்த கொள்ளிடம் குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர்வீணாகி வெளியேறி வருகிறது. திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்ளிடம் கூட்டு  குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் திட்டம்  துவக்கியபோது போடப்பட்ட பைப் லைனில்தான் குடிநீர் வருகிறது. இதில்  பல இடங்களில் பைப் லைன் சேதமடைந்து குடிநீர் தினந்தோறும் வீணாக சென்று  வருவது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடும்போது  உடனடியாக சரி செய்வது வழக்கமானதாகும், நிலத்தடி நீரும் குறைந்து போனதால்  குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு கோடைக்காலங்களில்   பொதுமக்கள் அவதிக்குள்ளாவது ஒன்றாகும்.

இந்நிலையில் திருத்துறைப்பூண்டி  வேதாரண்யம் சாலை பாண்டி ரோடு அருகில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின்  கீழ் தென்பாதி, வடபாதி பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்த பைப் லைன்  உடைந்துள்ளது. இதனால் தினந்தோறும் இந்த இடத்தில் காலை நேரத்தில் தண்ணீர்  வீணாக சாலையில் ஓடுகிறது. இதனால் இந்தபகுதிகளுக்கு முழுமையாக குடிநீர்  முறையாகவழங்க முடியவில்லை. மேலும் தினமும் குடிநீர் சாலையோரத்தில்  ஓடுகிறது. இதனால் தொற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.தற்போது கோடைகாலம்  என்பதால்இந்த நேரத்தில் குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்க சம்பந்தப்பட்ட  துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உடைந்த பைப் லைனைசரிசெய்தும், பைப் லைன்  உடையாமல் இருப்பதற்கும், தற்போது உடைந்தஇடத்தில் குடிநீர் வீணாக போவதை  தடுத்திடநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபிச்சன்கோட்டகம் முன்னாள்ஊராட்சி  மன்றதலைவர் மகாலிங்கம் மற்றும் பொதுமக்கள்மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை  மனுஅனுப்பியுள்ளனர்.

Tags : area ,Tiruthuraipondi ,Kollidam ,
× RELATED கொள்ளிடம் அருகே புத்தூரில் பாசன...