×

பேராவூரணி பேரூராட்சி சார்பில் வீடுவீடாக சென்று தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம்

பேராவூரணி, ஏப். 5: பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சியில் வீடுவீடாக சென்று தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. மக்களவை தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி மூலம் 18 வார்டுகளிலும் 4 வாகனங்கள் மூலம் வீடுவீடாக சென்று தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு, யாருக்கு வாக்களித்தோம் என வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒப்புகை சீட்டுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் கூடிய வாக்காளர் விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.ேமலும் வாக்களிப்பதின் அவசியம், 18 வயது பூர்த்தியடைந்தோர் அனைவரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் 800க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் பங்கேற்று தங்களது மாதிரி வாக்களிப்பை செலுத்தினர். ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் தலைமை எழுத்தர் சிவலிங்கம் செய்திருந்தார்.

Tags : Peravurani ,campaign ,
× RELATED பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி