×

நெல்லை அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் கிராமம், கிராமமாக வாக்கு சேகரிப்பு

நெல்லை, ஏப். 5: நெல்லை மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் பாளையங்கோட்டை ஒன்றியத்தில் நேற்று கிராமம், கிராமமாகச் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டு பரிசுப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் நேற்று சீவலப்பேரியில் பிரசாரம் துவக்கினார். தொடர்ந்து அவர், மறுகால்தலை, கான்சாபுரம், மருதூர், கீழப்பாட்டம், மணக்காடு, மணப்படை வீடு, கீழநத்தம், கேடிசி நகர், மேலப்பாட்டம், செட்டிகுளம், புதுமனை, நடுவக்குறிச்சி, உடையார்குளம், அரியகுளம், புத்தநேரி, கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.   
அப்போது அவர் பேசுகையில், ‘‘குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்ற பாடுபடுவேன். முதியோர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்கவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் அனைத்து பெண்களுக்கும் வேலை மற்றும் தாமதமின்றி ஊதியம் கிடைக்கவும் குரல் கொடுப்பேன்’’ என்றார்.

 பிரசாரத்தில் மாநகர் மாவட்டச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட பொருளாளர் பால்கண்ணன், இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் வி.கே.பி.சங்கர், மாவட்ட துணைச்செயலாளர் எம்சி ராஜன், ராஜை மாயாண்டி, பகுதி செயலாளர் அசன்ஜாபர்அலி, ஒன்றியச் செயலாளர் வைகுண்டராஜா, தொழிற்சங்கம் ஆவின் அன்னாசாமி, அமைப்பு சாரா தொழிற்சங்கம் காளிதாஸ் பாண்டியன், கேடிசி சின்னபாண்டி, பூக்கடை சப்பாணிமுத்து, மகளிர் அணி செயலாளர் ராம்சன் உமா, அவைத்தலைவர் முத்துலட்சுமி, திவ்யா, ஜெ. பேரவை செயலாளர் சுரேஷ்குமார், முன்னாள் பஞ், தலைவர்கள் செல்வராஜ், முத்துகிருஷ்ணன், இந்திய தேசிய லீக் மாவட்ட தலைவர் காதர் பாட்ஷா, தமஜக மாவட்டச் செயலாளர் அப்துல் ஜப்பார், செய்தித் தொடர்பாளர் ஜமால், மீனவர் அணி தாமஸ், வக்கீல் மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். முன்னதாக கந்தப்பேட்டையில் ஜமாஅத் தலைவர் செய்யது அகமது தலைமையில் வேட்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags : Michael Rayappan ,Nellai Ammukh ,village ,
× RELATED பூம்பாறை கிராமத்துக்கு போக்குவரத்து வசதி கோரி மனு..!!