×

கோவில்பட்டியில் கே.ஆர்.கல்வி நிறுவன சேர்மன் படத்திற்கு எடப்பாடி மரியாதை

கோவில்பட்டி, ஏப்.5:கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் சேர்மன் கே.ராமசாமியின் படத்திற்கு முதல்வர் எடப்பாடி மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். கோவில்பட்டி கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் சேர்மன் ராமசாமி சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். கோவில்பட்டியில் நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து கோவில்பட்டி அருகே புதூர் எம்.துரைச்சாமிபுரத்தில் உள்ள மறைந்த கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் சேர்மன் கே.ராமசாமியின் இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு முதல்வர் எடப்பாடி மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் அமைச்சர் கடம்பூர்ராஜூ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் அருணாசலம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : KR Gowri Company ,Kovilpatti ,
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் சுமை...