கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடியில் இன்று திருச்சி சிவா, ரெங்கராஜன் தீவிர வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி, ஏப். 5: தி.மு.க. வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து இன்று (5ம் தேதி) திருச்சி சிவா மற்றும் டி.கே.ரெங்கராஜன் பிரசாரம் செய்கின்றனர். இதுகுறித்து வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் சார்பில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வசந்தம் ஜெயக்குமார்  போட்டியிடுகிறார்கள். இவர்களை ஆதரித்து திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., இன்று

 இரவு 7 மணியளவில் விளாத்திகுளத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.அதேபோல், இன்று மாலை 6 மணியளவில் தூத்துக்குடி-பாளை ரோடு சிதம்பர நகர் பேரூந்து நிறுத்தம் எதிரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் முன்னணி தலைவர் டி.கே.ரெங்கராஜன் எம்.பி. பேசுகிறார். இக்கூட்டங்களில் அந்தந்த பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories:

>