×

இரட்டை ரயில்பாதையை 40 ஆண்டுகளாக கொண்டு வராதது ஏன்? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

நாகர்ேகாவில், ஏப். 5: இரட்ைட ரயில்பாதையை 40 ஆண்டுகளாக கொண்டு வராதது ஏன்? என ெபான்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி  பா.ஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மார்த்தாண்டம் அருகே  கோட்டகத்தில் இருந்து பிரசாரம் தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: குமரியில் ரயில்வே வளர்ச்சி திட்டங்களை கடந்த 40 ஆண்டுகளாக எம்.பியாக இருந்தவர்கள் கொண்டு வரவில்லை. நான்தான் மதுரை - நாகர்கோவில், நாகர்கோவில் - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதையை கடும் போராட்டத்திற்கு பின்னர் 100
சதவீதம் மத்திய அரசுநிதி மூலம் கொண்டு வந்துள்ளேன். இதனால், திருவனந்தபுரம் - நாகர்கோவில், நாகர்கோவில் - கன்னியாகுமரி, நாகர்கோவில் - சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். எதிரே வரும் ரயிலுக்காக வழியில் நீண்ட நேரம் காத்திருக்க ேவண்டிய அவசியம் கிடையாது. இதனால் குமரி மட்டுமின்றி தென்மாவட்ட மக்கள் அதிகம் பயன் பெறுவார்கள். இதுபோல் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ேமம்பாட்டு பணிகள் மேற்கொண்டுள்ளேன்.

கூடுதல் நடைமேடை,  லிப்ட் வசதி என பல்ேவறு மேம்பாட்டு பணிகளை மாவட்டம் முழுவதும் மேற்ெகாண்டுள்ேளன். இதனை ஏன் இதுவரை கொண்டு வரவில்லை என எதிர் கட்சியினரிடம் கேளுங்கள். இதுபோல் துரிதமான பயணத்திற்காக 4 வழிச்சாலை திட்டமும் கடும் போராட்டத்திற்கு பின்னர் நிறைவேற்றி உள்ளேன். ஆனால்  4 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த எதிர்த்தவர்கள் யார்? தற்போதும் பணிகள் தொடர முடியாமல் முட்டக்கட்டை போட்டு வருபவர்கள் யார் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். நீதிமன்றம் மூலம் வழக்குகள் தொடர்ந்து இந்த வளர்ச்சி திட்டங்களை மிகுந்த காலதாமதம் படுத்தி உள்ளனர். இந்த வழக்குகளை சட்டப்படி எதிர்கொண்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இரட்டை ரயில்பாதை, சாலை வசதியால் பயன் பெறுவது அனைத்து  தரப்பை சேர்ந்த பொதுமக்கள்தான்.

எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதி, மதம், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். எனவே இந்த வளர்ச்சி பணிகள் தொடர்ந்திட தாமரை சின்னத்தில் வாக்களித்து என்ைன வெற்றி பெற செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.ெதாடர்ந்து ெகாடுங்குளம், மார்த்தாண்டம், பள்ளியாடி, கல்லுக்கூட்டம்,  கொல்லஞ்சி, முள்ளஞ்சேரி, அஞ்சுகண்ணுகலுங்கு,  பாலவிளை, படந்தாலுமூடு, குழித்துறை சந்திப்பு ஆகிய இடங்களில் பிரசாரம் ெசய்தார். பிரசாரத்தின் ேபாது ேதமுதிக மேற்கு மாவட்ட ெசயலாளர் ஜெகநாதன், உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன்  உள்பட பா.ஜ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ponnar Radhakrishnan ,
× RELATED அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜ...