×

பத்மநாபபுரத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

நாகர்கோவில், ஏப்.5: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களுக்கு, பத்மநாபபுரம், சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தேர்தல் சிறப்புப்பயிற்சி வகுப்பு நடந்தது.  இந்த பயிற்சி மற்றும் கல்குளம் தாலுகா அலுவலத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறை ஆகியவற்றை தேர்தல் பொது பார்வையாளர் காஜல் மற்றும் சப் கலெக்டர் (பத்மநாபபுரம்) ஷரண்யா அறி ஆகியோர் பார்வையிட்டனர். வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18ம் தேதியன்று குமரி மாவட்டத்தில் தேர்தல் பணி மேற்கொள்ளும் மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு நாளில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதை குறித்தும், ஒவ்வொரு அலுவலர்களும் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தினை கையாள்வது குறித்தும், விவிபேட் கருவியின் செயல்பாடுகள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, கல்குளம் தாலுகா அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையினையும் தேர்தல் பொது பார்வையாளர் காஜல் ஆய்வு செய்தார். ஆய்வின்போது தாசில்தார்கள் சுப்பிரமணியன், ராஜாசிங் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...