×

மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க குரல் கொடுப்பேன் இந்திய கம்யூ. வேட்பாளர் செல்வராஜ் வாக்குறுதி

நாகை, ஏப்.5: மீனவர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த குரல் கொடுப்பேன் என்று இந்திய கம்யூனிஸ்ட்  வேட்பாளர் செல்வராஜ் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தார்.நாகை நாடாளுமன்ற தொகுதியின்  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராஜ் வேளாங்கண்ணி பேரூர் மற்றும் கீழையூர் ஒன்றியத்தில்  வாக்கு சேகரித்தார்.  வேளாங்கண்ணி பேரூரில் உள்ள அனைத்து வார்டுகள் மற்றும் கீழையூர் ஒன்றியம்  செருதூர், பிரதாபமராமபுரம்,திருப்பூண்டி கிழக்கு, விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, தாதன்திருவாசல், முதலியப்பன்கண்டி, கடையன்கோட்டகம், காரப்பிடாகை, சிந்தாமணி, கீழப்பிடாகை, திருப்பூண்டி, மகிழி, தலையாமழை, பொரியதுமபூர், கிராமத்துமேடு, ஆலமழை, வேப்பஞ்சேரி, பாலக்குறிச்சி,  இறையான்குடி, களத்திடல்கரை, மீனம்பநல்லூர், வாழக்கரை, மேலவாழக்கரை, திருக்குவளை, எட்டுக்குடி, திருவாய்மூர்,  வெண்மணச்சேரி, ஈசனூர்,  கீழையூர், மேலப்பிடாகை, கருங்கண்ணி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள சுமார் 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் தெரு, தெருவாக சென்று வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பின் போது   நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், முன்னாள் அமைச்சர்  மதிவாணன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். பிரசாரத்தின் போது நாகை மக்களை தொகுதி வேட்பாளர் செல்வராஜ் பேசுகையில்,  காவிரி டெல்டா மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவேன். விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும்.  மீனவர்களுக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்த குரல் கொடுப்பேன். குடிநீர் பிரசனையை போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  தமிழகத்தில் உள்ள அதிமுக ஆட்சியும், மத்தியில் உள்ள மோடி ஆட்சியும் அகற்றப்பட வேண்டிய ஆட்சிகள். இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எனக்கு கதிர்அறிவாள் சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொள்கிறோன். இவ்வாறு பேசினார்.


Tags : Selvaraj ,Indian Voice ,ministry ,fishermen ,
× RELATED விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் அந்தியூர் செல்வராஜ் 3 நாள் கலந்துரையாடல்