×

முத்துப்பேட்டையில் திமுக வார்டு செயலாளர்கள் கூட்டம்

முத்துப்பேட்டை, ஏப்.4:    முத்துப்பேட்டை நகர திமுக வார்டு செயலாளர்கள் கூட்டம் நகர அவைத் தலைவர் ராமஜெயம் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் சியா நவாஸ்கான் வரவேற்றார். மாவட்ட துணைச்செயலாளர் கார்த்திக் ஆலோசனை வழங்கி பேசினார். கூட்டத்தில் முத்துப்பேட்டை பகுதிக்கு வாக்கு கேட்டு வரும் திமுக கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது, நடைபெற இருக்கும் தேர்தலில் அதிக வாக்குகள் பெற கடுமையாக பணியாற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர பொருளாளர் பாலு, மாவட்ட பிரதிநிதி இபுராஹீம், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜெகபருல்லா உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

Tags : meeting ,Secretaries ,DMK Ward ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...