×

நிர்வாகிகள், தொண்டர்கள் வராததால் பிரசாரத்தை பாதியிேலயே விட்டு விட்டு ஓட்டம் மாஜி அமைச்சர் சிவபதிக்கு அதிமுகவினர் கல்தா ஓட்டு கேட்க மட்டும்தான் வருவீர்களா? தண்ணீர் பிரச்சனையை கண்டு கொள்வதில்லை ? பொதுமக்கள் சரமாரி கேள்வியால் கூட்டணி கட்சியினரும் அதிர்ச்சி

திருச்சி,ஏப்4: பெரம்பலுார் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட் பாளர் சிவபதி பிரசாரத்தில் அதிமுகவினர் அனைவரும் வராததால் அப்செட்டில் பாதியில்  தனது பிரசாரத்தை நிறுத்தி விட்டு சென்றதால் வெயிலில் காத்து கிடந்த கூட்டணி கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.பெரம்பலுார் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சிவபதி போட்டியிடுகிறார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி யில் பல இடங்களில் வேட்பாளர் சிவபதி கூட்டணி கட்சியினருடன் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.முதலவாதாக கொள்ளிடம் டோல்கேட்டில் காலை 7 மணிக்கு பிரச்சாரம் ஆரம்பிக்க போவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் டோல்கேட்டில் அந்தந்த கட்சி கொடிகளுடன் வெயிலில் காத்திருக்க வேட்பாளர் சிவபதி 9 மணிக்குத்தான் அங்கு வந்தார்.தொடர்ந்து பிரசார சுற்றுப்பயணத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நொச்சியம், கூத்துார், சமயபுரம், இனாம்சமயபுரம், இருங்களுர், புறத்தாக்குடி, சிறுகனுார், பெரகம்பி, திருப்பட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முன்னாள் அமைச்சர் பூனாட்சி, எம்எல்ஏ பரமேஸ்வரி, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் ஆகியோருடன் வேட்பாளர் சிவபதி திறந்த ஜீப்பில் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த பகுதிகளில் சென்ற இடங்களில் எல்லாம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண் டர்கள் தவிர, கூட்டணி கட்சிகளான பாமக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சி களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ெதாண்டர்கள் தான் கட்சி கொடிகளுடன் நின்றதால் அப்செட்டில் எதுமலை, வலையூர், தத்தமங்கலம், அய்யம் பாளையம், திருப்பைஞ்சீலி, திருவள்ளரை ஆகிய இடங்களுக்கு வேட்பாளர் சிவபதி செல்லாமல் திருப்பட்டூர் பகுதியோடு பிரசாரத்தை முடித்துக் கொண்டார்.பின்னர் அங்கிருந்து பெரம்பலூர் பகுதிக்கு சென்றுவிட்டார். இதனால் அங்கு மைக் செட் கட்டி கொடிப்பிடித்து மேளதாளங்கள் முழங்க காத்திருந்த கூட்டணி கட்சி தொண்டர்களும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கடும் அதிருப்தி அடைந்தனர்.இது குறித்து அதிமுக கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்த போது, வேட்பாளர் சிவபதிக்கு சீட்டு கொடுக்க முன்னாள் அமைச்சர் பூனாட்சி, எம்எல்ஏ பரமேஸ்வரி, மண்ணச்ச நல்லுார் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் முதல்வரை நேரில் சந்தித்து சீட் வாங்கி கொண்டு வந்தாராம்.கூட்டணி கட்சி பிரமுகர்கள் மட்டுமல்லாமல் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை யாரும் மதிப்பது கிடையாது. அனுசரித்து செல்வதும் கிடையாது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். மேலும் அதிமுக முக்கிய நிர்வாகிகளே பலர் தற்போது அமமுக விற்கு சென்றுவிட்டதால உள்ளூரில் செல்வாக்கு உள்ள பல நிர்வாகிகளை பிரசாரத்தில் காணமுடியவில்லை. இதனால் மக்கள் மத்தி யில் நன்கு அறிமுகம் ஆன பிரமுகர்கள் இல்லாமல் சிவபதியின் பிரசாரம் களையிழந்து காணப்படுகிறது என்றனர்.

சிவபதியிடம் பெண்கள் சரமாரி கேள்வி : பெரம்பலுார் தொகுதி பாடலுார் அருகே ஆலத்தூர் ஒன்றிய பகுதியில் உள்ள செட்டிகுளம், மாவலிங்கை, தேனூர், கண்ணப்பாடி, டி.களத்தூர், அடைக்கம்பட்டி, நக்கசேலம், புதுஅம்மாபாளையம், புதுவிராலிப்பட்டி, பழையவிராலிப்பட்டி, சிறுவய லூர், குரூர், மங்கூன் உள்ளிட்ட கிராமங்களில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், சிதம்பரம் எம்.பி சந்திரகாசி, பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர்  சிவசுப்பிரமணியம், தே.மு.தி.க மாவட்ட செயலாளர் துரை.காமராஜ், உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுடன் வேட்பாளர் சிவபதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.அப்போது செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அபிஷேகம் செய்து விட்டு புறப்பட்ட வேட்பாளர் சிவபதி, செட்டிகுளம், மாவலிங்கை கிராமத்தின் வழியாக கண்ணப்பாடி சென்றார். அப்போது அங்கு காத்திருந்த பெண்கள் காலிக்குடங் களு டன் தண்ணீர் கேட்டு மறியல் செய்ய முயன்றனர். ஆனால் அங்கிருந்த நிர்வாகிகள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.  இதனையடுத்து டி.களத்தூர் கிராமத்திற்கு சென்ற வேட்பாளர் சிவபதி, அங்கு வந்த பொதுமக்கள் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் நன்றி கூறி சென்ற நாடா ளுமன்ற உறுப்பினர், இதுவரை திரும்பி கூட பார்க்க வில்லை. தேர்தலுக்கு தேர்தல் ஓட்டு கேட்க மட்டும் தான் வருவீர்களா? பொதுமக்களின் தண்ணீர் பிரச்சனைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சரமாரி கேள்வி எழுப்பினர்.

சிவபதி ஓட்டம்:அடைக்கம்பட்டி, நக்கசேலம் ஆகிய கிராமங்களிலும் தண்ணீர் பிரச்சனை யை தீர்க்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனை கேட்ட வேட்பாளர் சிவபதி தண்ணீர் பிரச்சனைaயை தீர்க்க உரிய நடவடி க்கை எடுக்கப்படும் தெரிவித்த அவர், அங்கிருந்து பாதியிலேயே புறப்பட்டு சென்றார். தொடர்ந்து 4 கிராமங்களிலும் தண்ணீர் பிரச்சனையை பொதுமக்கள் எழுப்பியதால் அடுத்த கிராமங்களில் அனைத்து பகுதிக்கும் செல்லாமல் நெடுஞ்சாலையிலேயே சென்றவாறு வாக்கு கேட்டு சென்றனர். ஆலத்தூர் தாலுகா பகுதியில் வாக்கு கேட்க வந்த முதல்நாளே பல்வேறு கிராமங்களில தண்ணீர் பிரச்சனையை தொடர்ந்து பொதுமக்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : executives ,Sivapati ,campaign ,volunteers ,Kalda ,coalition parties ,
× RELATED பொதுமக்களிடம் ரூ.3.89 கோடி வரை முதலீடு...