வீரகனூரில் தேமுதிக சார்பில் விதிமுறை மீறி தேர்தல் அலுவலகம் திறப்பு

கெங்கவல்லி, ஏப்.4:  கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரகனூர் பேரூராட்சியில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் சுதீஷ், நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வீரகனூர் பஸ் நிறுத்தம் அருகே, தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற்று தான், தேர்தல் அலுவலகம் திறக்க வேண்டும். ஆனால், உரிய அனுமதி பெறாமலேயே ஆளும்கட்சியினர் ஆதரவுடன், தேர்தல் வீதிகளை மீறி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் தேர்தல் புகார் மையத்துக்கும், தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கபட்டது. இதன் பேரில், வீரகனூர் தேமுதிக அலுவலகத்தில் இருந்து கொடிகள், பேனர்களை வீரகனூர் போலீசார் அகற்றினர். பின்னர், வீரகனூர் தேமுதிக பேரூர் செயலாளர் சக்ரவர்த்தி, விண்ணப்பம் படிவத்தை பூர்த்தி செய்து, மாலை 4 மணிக்கு தேர்தல் உதவி அலுவலர் வேடியப்பனிடம் அளித்தார்.

Related Stories: