திருச்சி மக்களவை தொகுதியில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி,ஏப்.4: திருச்சி மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடுகிறது. தேமுதிக வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று திருச்சி மாநகர் பகுதியில் பொதுமக்களிடம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பாலக்கரை, சங்கிலியாண்டபுரம், செந்தண்ணீர்புரம், முதலியார்சத்திரம் கல்லுக்குழி, ஆர்எம்எஸ் காலனி, டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், ரேஷ்கோர்ஸ் சாலை, காஜாமலை, வயர்லெஸ்சாலை, கேகே நகர், சாத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளையும், தாம் செய்யப் போகும் திட்டங்களையும் எடுத்துக்கூறி வாக்குகள் சேகரித்தார்.

அப்போது இளங்கோவன் பேசுகையில், நாட்டின் வளர்ச்சியிலும் , பாதுகாப்பிலும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து சிறந்த வகையில் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் என்னை நேரடியாக எந்நேரமும் சந்தித்து பேசலாம். உங்களில் ஒருவனாக இருந்து மக்களின் அடிப்படை பிரச்னைகளை உடனுக்கு உடன் தீர்த்து வைப்பேன். எனக்கு வெற்றி சின்னமான முரசு சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்று கூறினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, அதிமுக மாவட்ட செயலாளர் குமார் எம்.பி, தேமுதிக மாவட்ட செயலாளர் கணேஷ்.

Tags : Ilangovan ,constituency ,Trichy Lok Sabha ,
× RELATED ஓமலூர் தொகுதியில் பாமக துண்டு பிரசுரம் விநியோகம்