×

லால்குடி அருகே வாகன சோதனையில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

லால்குடி, ஏப்.4: லால்குடி அருகே கல்லக்குடி பகுதியை சேர்ந்தவர் அமுல்ராஜ் மகன் அருள் பிரசாத். இவர் நேற்று இரவு கல்லக்குடியிலிருந்து நொச்சியம் செல்வதற்காக காரில் வந்துள்ளார். திருச்சி - அரியலூர் சாலையில் பூவாளூர் பிரிவு சாலையில்  கார் சென்றபோது தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். இதில் அருள் பிரசாத் காரில் இருந்த ரூ.1.லட்சத்து 45 ஆயிரத்து 690ஐ   உரிய ஆவணங்கள் இல்லாததால்  பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து லால்குடி கருவூலத்தில் லால்குடி தாசில்தார் சத்திய பாலகங்காதரன் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

Tags : vehicle test ,Lalgudi ,
× RELATED ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை...