×

திருச்சி அண்ணாசிலை பகுதியில் உறுதித்தன்மையுடன் இருக்கும் சென்டர் மீடியன் உடைத்து அகற்றம் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

திருச்சி, ஏப்.4: திருச்சி அண்ணாசிலையில் இருந்து காவிரி பாலம் வரை சாலையில் செல்லும் கான்கிரீட்டால் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நல்ல உறுதியுடன் இருக்கக்கூடிய கான்கிரீட் சென்டர் மீடியனை நேற்று பணியாளர்கள் சிலர் பெரிய டில்லர்களை வைத்து உடைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் ரவிக்குமாரிடம் கேட்டபோது, சென்டர்மீடியனை இடித்து புதிய சென்டர் மீடியன் அமைக்கப்பட உள்ளது என்றார்.

உறுதித்தன்மையுடன் உள்ள சென்டர் மீடியன் ஏன் இடிக்கீறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இது குறித்து சாலை பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் அமைப்பை சேர்ந்த அய்யாரப்பன் கூறுகையில்
அண்ணாசிலை-காவிரி பாலம் வரை உள்ள பலமான  சென்டர் மீடியனை  பெரிய பவர் டில்லர்களை வைத்து உடைத்து வருகின்றனர். ஆனால் இந்த சென்டர் மீடியனை இடித்து விட்டு இதே இடத்தில் மீண்டும் சென்ட்ர் மீடியன் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறை நிதிஒதுக்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வரிப்பணத்தை இப்படி வீணாக செலவு செய்வது வேதனையை ஏற்படுத்துகிறது என்றார்.

Tags : Trichy Annasillai ,area ,center ,removal ,activists ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி