×

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் மருத்துவர் பற்றாக்குறை

அருப்புக்கோட்டை, ஏப். 4: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் பற்றாக்குறையால், கர்ப்பிணி பெண்கள் அவதிப்படுகின்றனர். அருப்புக்கோட்டையில் உள்ள பந்தல்குடி ரோட்டில் அரசு மருத்துவமனை உள்ளது. தேசிய தரச்சான்று பெற்ற இந்த மருத்துவமனை தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான வசதிகளை கொண்டது. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு தலைமை மருத்துவர் உட்பட 23 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். ஆனால், பிரசவ வார்டில் 5 மருத்துவர்களுக்கு 2 பெண் மருத்துவர்கள் உள்ளனர். 23 மருத்துவர்களில் 4 பேர் மாற்றுப்பணிக்கு வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். மயக்கவியல் மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை.

மேலும், ஒரு சில மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருந்தால், அவர்களுக்கு மறுநாள் விடுப்பு வழங்கப்படுகிறது. சிலர் நீதிமன்ற பணிக்காக சென்று விடுகின்றனர். பாக்கியிருக்கும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள மருத்துவர்கள் மூலம்தான் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். இதனால், நோயாளிகள் காலையில் இருந்து நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெறுகின்றனர். மகபேறு மருத்துவர்கள் பற்றாக்குறை மகப்பேறு மருத்துவத்திற்கு இந்த மருத்துவமனை கைராசியான மருத்துவமனை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், வெளிமாவட்டங்களிலிருந்து பிரசவத்திற்கு கர்ப்பிணிகள் அதிகமாக வருகின்றனர். 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் சீமாங் மருத்துவமனையாகும். இந்நிலையில், மகப்பேறு பிரிவில் 5 மருத்துவர்களுக்கு 2 பேர் தான் இருக்கின்றனர். இதில் ஒருவர் 24 மணிநேரம் ‘டூட்டி’ பார்த்தால் மறுநாள் ஒரு மருத்துவர் மட்டும் பணியில் இருப்பார். இவரும் கர்ப்பிணி பெண்களுக்கான அறுவை சிகிச்சை அரங்கிற்கு சென்றுவிட்டால், பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவர் வரும்வரை பலமணி நேரம் காத்திருக்கின்றனர். எனவே, அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் போதிய மருத்துவர்களை நியமிக்கவும், இருக்கும் மருத்துவர்களை மாற்றுப்பணிக்கு அனுப்பாமல் இருக்கவும்  மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்பரிசோதனைக்கு நீண்ட நேரம் காக்கும் கர்ப்பிணிகள்

Tags : physician ,Arupukkottai ,
× RELATED பயணிகள் கூட்டத்தில் மினி பஸ் மோதி 3 வயது சிறுவன் பலி