×

வெள்ளப்பெருக்கில் சேதமான மாட்டுப்பட்டி சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் மூணாறு மக்கள் கோரிக்கை

மூணாறு, ஏப்.4: மூணாறில் முக்கிய சுற்றுலா தலமான மாட்டுப்பட்டி சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்
ளனர்.தென்னகத்து காஷ்மீர் என்று அழைக்கப்படும் மூணாறில் முக்கிய சுற்றுலா தலமாக கருதப்படுவது மாட்டுப்பட்டியாகும். இங்கு மாட்டுப்பட்டி அணை, குண்டலை அணை, எக்கோ பாய்ண்ட், டாப் ஸ்டேஷன் போன்ற சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளன. இவைப் பார்க்க தினந்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூணாறில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தால் மாட்டுப்பட்டி - வேல்முடி பங்களா பகுதிகளில் இருந்த சாலைகள் முற்றிலும் நாசமாயின. பின்னர் சாலையின் ஒரு பகுதி சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு சரிசெய்யப்பட்டது.

இந்த ஆபத்தான சாலையில் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் கடந்து சென்றன. இந்த நிலையை கருத்தில் கொண்டு சாலைகளை முழுவதும் சீரமைக்க பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், முழுமையாக நிதி கிடைக்காத நிலையில் பாதியிலேயே பணிகள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக சாலைப்பணி முழுமையடையமால் உள்ளது. மூணாறில் மழைக்காலம் துவங்க இன்னும் சில மாதங்கள் உள்ளது. இதனால் மாட்டுப்பட்டி சாலையால் பெரும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டுனர்கள் கூறுகையில், `` ஒவ்வொரு நாளும் இந்த சாலை வழியாக உயிருக்கு பயந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது. சற்று கவனம் தவறினாலும் பெரும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, அரசு கொடுத்த நிதியை தகுந்த முறையில் பயன்படுத்தி சாலைகளை சீரமைத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.

Tags : Munnar ,buffer road ,
× RELATED மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்