நத்தம் அருகே அரசு பள்ளிக்கு கல்விசீர் வழங்கி கிராமத்தினர் அசத்தல்

நத்தம், ஏப். 4: நத்தம் அருகே அரசு பள்ளிக்கு கல்சீர்வரிசை பொருட்கள் வழங்கி கிராமத்தினர் அசத்தினர். நத்தம் அருகே கவரயபட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்க கிராமமக்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று கிராமமக்கள் கல்வி உபகரணங்களான பீரோ, மேஜை, நாற்காலி, சில்வர் குடம், வாளி போன்றவற்றை ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளியில் வழங்கினர். ஊர்வலம் முன்பாக மாணவ, மாணவிகளின் கரகாட்டம் பட்டையை கிளப்பியது. இதேபோல் பள்ளியின் விளையாட்டு விழா, ஆண்டு விழா நடத்தப்பட்டது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.

Tags : government schools ,village ,Natham ,
× RELATED தார் சாலை அமைப்பதற்கு முட்டுக்கட்டை...