×

நெரூர், மின்னாம்பள்ளி சந்திப்பு பகுதியில் விபத்தை தடுக்க மினி ரவுண்டானா அமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

கரூர், ஏப். 4: கரூர் மாவட்டம் நெரூர், மின்னாம்பள்ளி சந்திப்பு பகுதியில் விபத்தினை தடுக்கும் வகையில் மினி ரவுண்டானா அமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் மாவட்டம் அரசு காலனி பகுதியில் இருந்து சந்தனகாளிபாளையம் வழியாக நெரூர், மின்னாம்பள்ளி, சோமூர், கோயம்பள்ளி, திருமுக்கூடலு£ர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. கரூரில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான இரண்டு சக்கர வாகனங்களும், இதே போல், இந்த பகுதிகளில் இருந்து கரூர் நோக்கியும் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது. மேலும், மினி பஸ் மற்றும் பேருந்துகளும் இந்த சாலையின் வழியாக அதிகளவு சென்று வருகிறது. சந்தனகாளிபாளையம் பகுதியை தாண்டியதும் மின்னாம்பள்ளிக்கு செல்லும் சாலை பிரிகிறது. மூன்று வழிப்போக்குவரத்து நடைபெற்று வரும் இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெற்று வருகிறது.

மூன்று பகுதிகளில் இருந்தும் வாகனங்கள் ஒரே வந்து பிரிந்து செல்வதால் இந்த பகுதியில் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெருக்கடியும், இரவுநேரங்களில் வாகன விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. முற்றிலும் கிராமங்களை சூழ்ந்த பகுதியாக உள்ளதால், விவசாயிகள் உட்பட தினமும் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு வேலை விஷயமாக கரூர் வந்து செல்கின்றனர். எனவே மூன்று சாலைகள் சந்திக்கும் இந்த இடத்தில், போதிய மின்விளக்கு வசதி ஏற்படுத்தி, மினி ரவுண்டானா அமைத்து தர வேண்டும் என  மக்கள்   கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே மக்களின் நலன் கருதி, விபத்தினை தடுக்கும் வகையில் இந்த பகுதியில் மின்விளக்கு வசதி மற்றும் மினி ரவுண்டானா வசதி ஏற்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என  மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags : accident ,Mini Roundabout ,Nerur ,Minnampalli Junction ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...