×

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வருகை சங்கரன்கோவிலில் அதிமுக, கூட்டணியினர் ஆலோசனை

சங்கரன்கோவில், ஏப். 4: தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று (4ம் தேதி) சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்கிறார். இதையொட்டி அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அமைச்சர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி, அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் சண்முகையா, தேமுதிக மாவட்ட செயலாளர் சோலைகனகராஜ், பாமக மாநில துணை தலைவர் திருமலை குமாரசாமி, பாஜ மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், புதியதமிழகம் மாவட்ட செயலாளர் இன்பராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆறுமுகம், வேல்சாமி முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், வேல்முருகன், வாசுதேவன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பரமகுருநாதன், நகர எம்ஜிஆர் இளைஞரணி தலைவர் சவுந்தர் என்ற சாகுல்ஹமீது, அரசு ஒப்பந்ததாரர் மாரியப்பன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Edappadi Palaniasamy ,allies ,Sankarankoil ,AIADMK ,
× RELATED பெரம்பலூரில் அம்பேத்கர் சிலைக்கு...