×

மாற்றுத் திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வாக்குச்சாவடி மையங்களில் சாய்வுதளம், வீல்சேர் ஏற்பாடு

காஞ்சிபுரம், ஏப்.4: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரும் மக்களவை பொதுத்தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து, மாற்றுத் திறனாளிகளுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது. அப்போது, கலெக்டர் பொன்னையா கூறியதாவது. மக்களவை தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது.இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்காளிப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து வசதிகளும் செய்துதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில், மாற்றுத்திறனாளிகளுக்காக இந்திய தேர்தல் ஆணையம் செயலி (மொபைல் அப்) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பெயர், இடம் மற்றும் வீல் சேர் தேவையெனில், அதனை இந்த அப் மூலம் தெரிவித்தால், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவு செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், மின்சாரம் மாற்றுத் திறனாளிகள் சென்று வாக்குப்பதிவு செய்ய சாய்வுதளம், தேவையான அளவு வீல் சேர் ஆகிய வசதிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பார்வையற்றோர் வாக்களிப்பதற்கு வசதியாக, பிரெய்லி முறையும் வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீத மாற்றுத் திறனாளிகள், தங்களது வாக்கினை 18ம் தேதி தவறாமல், பதிவு செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் பெரும்புதூர் மக்களவை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் தர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) ஜீவா உள்பட தேர்தல் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : volunteer centers ,voters ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...