×

திருத்தணியில் திமுகவினர் வாக்கு சேகரிப்பு

திருத்தணி, ஏப். 4: அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திமுகவைச் சேர்ந்த டாக்டர் ஜெகத்ரட்சகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு, நேற்று காலை திருத்தணி நகர திமுக செயலாளர் எம். பூபதி, மாவட்ட துணை செயலாளர் திருத்தணி சந்திரன், வழக்கறிஞர் வி. கிஷோர் ரெட்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத்குமார், ஜி. எஸ். கணேசன் ஷ்யாம், முன்னாள் கவுன்சிலர் ப்ரவீன்குமார் உள்பட ஏராளமான திமுகவினர் 5 மற்றும் 7வது வார்டுகளில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

Tags :
× RELATED இரண்டாம் கட்டமாக இலங்கை மறுவாழ்வு...