×

பிரசார வாகனத்துக்கு அனுமதி தராமல் அலைக்கழிப்பு கலெக்டர் அலுவலம் முன் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் தர்ணா: பெட்ரோல் பாட்டிலுடன் வந்ததால் பரபரப்பு


திருவண்ணாமலை, ஏப்.4: பிரசார வாகனத்துக்கு அனுமதி வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதை கண்டித்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பெட்ேரால் பாட்டிலுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடுபவர் வேட்பாளர் பாபு(32). இவர், தன்னுடைய தேர்தல் பிரசார வாகனத்துக்கு அனுமதி கேட்டு, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்தார். ஆனால், பிரசார வாகனத்துக்கு அனுமதி வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பாபு, பெட்ரோல் நிரம்பிய பாட்டிலுடன் வந்து நேற்று கலெக்டர் அலுவலகம் முன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, தேர்தல் பிரிவு தாசில்தார் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து, பாபுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் அரை மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, போராட்டம் முடிவுக்கு வந்தது. பிரசார வாகனத்துக்கு உடனடியாக அனுமதி அளிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதுகுறித்து, வேட்பாளர் பாபு கூறியதாவது: திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் தேசிய கட்சி வேட்பாளரான என்னுடைய பிரசார வாகனத்துக்கு முறையாக அனுமதி கேட்டு விண்ணப்பித்தும், அதிகாரிகள் அலட்சியப்படுத்தினர். தேர்தல் பிரிவு அலுவலகத்துக்கு பலமுறை நேரில் சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை. வேட்பாளருக்கு உரிய மரியாதையும் தரவில்லை. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பாகுபாடுடன் நடந்து கொள்கின்றனர். எனவே, கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை உருவானது என்றார்.
இந்த திடீர் தர்ணா போராட்டத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Darna ,Fans ,Tharagazha Samaj Party ,
× RELATED தென்கொரியாவைக் கலக்கும் 80வயது...